அதிவேகத்தில் வந்த மண் லாரி மோதி தொழிலாளி பலி... தவெக நிர்வாகி கைது!
நாட்றம்பள்ளி அருகே மண் கடத்தி வந்த டிப்பர் லாரி மோதி கட்டிடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வெலக்கல்நத்தம், கிட்டபையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(38) மற்றும் பர்கூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(58) ஆகியோர் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏலகிரிமலை, பாடானூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி(26) ஓட்டிய லாரி அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கு காரணமாக சட்டவிரோத மண் கடத்தல் மற்றும் அதிவேக ஓட்டம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் ரங்கசாமி மற்றும் லாரி உரிமையாளர் நவமணி(48) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நவமணி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
