அனல்மின் நிலையத்தில் தொழிலாளி பலி.. நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

 
அனல் மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளிக்கு நிவாரணம் கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி. இவருடைய மகன் மனோகரன் (வயது33). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் அனல்மின் நிலையம் பின்புற கேட்டின் மேல் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் நிலக்கரியை சுத்தம் செய்து கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலத்தகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மனோகரனுக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

அனல் மின் நிலையம்

இந்த நிலையில் இறந்த மனோகரனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் நிவாரணமும் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியிடத்தில் பாதுகாப்பு சூழலை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய வேண்டும். பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது