தமிழகத்தின் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி!

 
உலக வங்கி அனுமதி


 

2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இதில், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்  1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட இருப்பதாக  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

மகளிர் வேலைவாய்ப்பு
தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் 5 ஆண்டுகளில் கீழ் 6 லட்சம் மகளிருக்கு திறன் பயிற்சி மற்றும் 18000 மகளிருக்கு சுய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட உள்ளது. 

உலக வங்கி

இந்த நிதி ஆண்டில் 8 மாவட்டங்களில் 168 கோடியில் பல்வேறு திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அனைத்தும் அடங்கிய பல்துறை தகவல் தளம், உலகளாவிய பெண்கள் உச்சி மாநாடு, மண்டல அளவிலான உள்வளர் சூழல் மையங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது