உலக வங்கித் தலைவர் திடீர் பதவி விலகல்!! வைரலாகும் ட்வீட்!!

 
டேவிட் மால்பிளஸ்

உலக வங்கியின் 13 வது தலைவராக 2019, ஏப்ரல் 5ம் தேதி  டேவிட் மல்பாஸ்   தேர்வு செய்யப்பட்டார்.  இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். திடீரென அவர் தற்போது பதவி விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உலக வங்கியின் இயக்குநர்கள் குழுவிடம் நடப்பு நிதியாண்டு முடிவடையும் தினமான ஜூன் 30 ம் தேதி பதவி விலகுவதாக  தெரிவித்துள்ளேன்.

டேவிட் மால்ப்ளஸ்

உலக வங்கியின் தலைவராக பணிபுரிந்தது என் பாக்கியம். மிகப்பெரிய மரியாதையை இந்த குழு எனக்கு அளித்தது என பதிவிட்டுள்ளார். இவர் அமெரிக்காவுக்கான சர்வதேச விவகாரங்களுக்கான கருவூலத்தின் துணைச் செயலாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே பதவி விலகுவது குறித்து உலக வங்கிக் குழுவின் வளர்ச்சி சவால்களைச் சமாளிப்பதற்கும், தாக்கத்தை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் எல்லா செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. உலக வங்கிக் குழும நிறுவனங்களில் உள்ள நிர்வாக இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஆதரவிற்கு எனது மகத்தான நன்றிகள்.


உலகளாவிய நெருக்கடி காலங்களில் தொடர்ச்சியான நிதி உதவி வழங்கப்பட்டது.  கொரோனாவை எதிர்க்கொள்ள 150 பில்லியன் அமெரிக்கா டாலர்களும், ரஷ்யா-உக்ரைன் போரை எதிர்கொள்ள  170 பில்லியன் டாலர்களும்  கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் மீதமுள்ள நாட்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் கவனத்தை செலுத்துவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால்  அவர் முன்கூட்டியே பதவி விலகுவதற்கான காரணம் எதுவும் இந்தப் பதிவுகளில் குறிப்பிடவில்லை .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web