உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்... வைஷாலி கால் இறுதி போட்டிக்கு தகுதி!

 
பிரக்ஞானந்தா வைஷாலி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில்  இந்தியாவின் வைஷாலி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரி ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் ஒவ்வொரு பிரிவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மூன்று நிமிடமும் ஒரு நகர்த்தலுக்கு இரண்டு வினாடிகள் கூடுதலாகவும் நேரம் வழங்கப்படும். இதனால் போட்டி யோசிக்கவே நேரம் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெறும்.

வைஷாலி செஸ்

இந்த போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தோல்வியே தழுவாமல் 9.5 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தார். 11 சுற்றில் 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் டிராவும் செய்திருந்தார். செஸ் விளையாட்டில் மிகப்பெரிய வீராங்கனைகளாக கருதப்படும் ஜார்ஜியாவின் நானா,போலந்தின் போளினா மற்றும் நடப்பு பிளிட்ஸ் சாம்பியனான ரஷ்யாவின் வாலண்டினா ஆகியோரை வீழ்த்தி வைஷாலி முதல் இடத்தை பிடித்திருந்தார். 

பிரக்ஞானந்தா

இந்த பிரிவில் மற்ற இந்திய வீராங்கனைகளான ஹர்னிகா, கோனேரு ஹம்பி,திவ்யா தேஸ்முக் உள்ளிட்ட வீராங்கனைகள் தோல்வியை தழுவினர். இதன் மூலம் தற்போது வைஷாலி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார். நாளை காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை ஜினருடன்  விளையாட உள்ளார்.

அதே சமயம் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர். டாப் 20 இடங்களில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 24 வது இடத்தை பிடித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web