உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷி.. அடுத்தடுத்து 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!

 
நிது கங்காஸ்

உலககுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.

நிது கங்காஸ்

81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சவீதி பூரா தற்போது தங்கம் வென்றுள்ளார். அவர் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலககுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நிது கங்காஸ்

நிது கங்காசுடன் சேர்த்து இந்திய வீராங்கனைகள் மொத்தம் 11 முறை மகளிர் குத்துச் சண்டை பிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2002, 2005, 2008, 2010, 2018 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மேரி கோமும், 2006-இல் சரிதா தேவி, 2006 மற்றொரு உலக சாம்பியன் தொடரில் ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி, 2022 இல் நிகாத் ஸரீன் ஆகியோர் குத்துச் சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web