உலக சாம்பியன்: பில்லியர்ட்ஸ் ஜாம்பவான் மனோஜ் கோத்தாரி திருநெல்வேலி மருத்துவமனையில் காலமானார்!

 
பில்லியர்ட்ஸ் மனோஜ்

இந்தியாவின் மிகச்சிறந்த பில்லியர்ட்ஸ் வீரர்களில் ஒருவரான மனோஜ் கோத்தாரி (67), உடல்நலக் குறைவு காரணமாகத் திருநெல்வேலியில் நேற்று காலமானார். கொல்கத்தாவைச் சேர்ந்த மனோஜ் கோத்தாரி, பில்லியர்ட்ஸ் விளையாட்டில் இந்தியாவிற்குப் பல பெருமைகளைத் தேடித்தந்தவர்.

கடந்த 1990ம் ஆண்டு நடைபெற்ற உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்தியப் பில்லியர்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிப் பல வீரர்களை உருவாக்கினார். விளையாட்டுத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 2005-ல் 'தயான் சந்த்' விருதினை வழங்கி கௌரவித்தது.

பில்லியர்ட்ஸ் மனோஜ்

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், முதலில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 26ம் தேதி இவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மனைவி நீட்டா மற்றும் மகன் சவுரவ் கோத்தாரி ஆகியோர் இறுதிவரை அருகில் இருந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் மரியாதைக்குப் பிறகு, அவரது உடல் திருநெல்வேலி வி.எம்.சத்திரம் மாநகராட்சி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

பில்லியர்ட்ஸ் மனோஜ்

மனோஜ் கோத்தாரியின் மகன் சவுரவ் கோத்தாரியும் ஒரு மிகச்சிறந்த பில்லியர்ட்ஸ் வீரர் ஆவார். தந்தை வழியில் இவரும் கடந்த 2025ம் ஆண்டு உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!