உலக சுற்றுசூழல் தினம்.. வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் பதிவு!

 
ஸ்டாலின் தமிழக அரசு

இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க அதிக அளவில் மரங்கள் நடவும் அறிவுறுத்தப்படுகிறது.  மனிதா்களுடன்   பறவைகளும், விலங்குகளும் பாதுகாப்பாக வாழ்ந்திட மரம் அவசியமாகிறது. 

அந்த வகையில் நடப்பாண்டில்  'நெகிழி மாசுவை முடிவுக்கு கொண்டு வருவோம்'என்ற கருப்பொருளை வலியுறுத்தி சைக்கிள் பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடுதல்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்  நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது