உலக தலைவர்கள் அதிர்ச்சி... பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் எஸ்டேட்டில் பல பெண்களுடன் டிரம்ப்!

 
ட்ரம்ப்

அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளியான நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய எஸ்டேட்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல பெண்களுடன் நிற்கும் சர்ச்சை புகைப்படம் வெளியாகி தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன், பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கப் பிரமுகர்களுடன் நெருங்கியத் தொடர்புகளை வைத்திருந்தவர். அவர் இளம் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்றக் குற்றச்சாட்டுகளால் 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் மர்மமான முறையில் அவர் இறந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ட்ரம்ப்

இந்நிலையில் எப்ஸ்டீனுக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில் (எஸ்டேட்) எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சர்ச்சைக்குரிய புகைப்படங்களில் டிரம்ப் மட்டுமல்லாமல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்டப் பல பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். இது, எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி பதிவுகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

ட்ரம்ப்

இந்தக் கோப்புகளில் டிரம்ப் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது, 'எப்ஸ்டீன் கோப்புகள்' வெளியாகும் பரபரப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆவணங்கள் வெளியானால், உலக அளவில்ப் பல முக்கியப் பிரபலங்களின் அரசியல் மற்றும் சமூக இமேஜ் அடியோடு சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!