உலக சாதனை... 13 வயது சிறுமி ஒரே நிமிடத்தில் 10 கடினமான யோகாசனம்... குவியும் பாராட்டுகள்!

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் யோகாசனங்கள் கற்று தரப்பட்டன. யோகா என்பது உடல் மற்றும் மன நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்திலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பலரும் பல யோகாசனங்களை செய்து ஆச்சரியப்படுத்தினர்.
#Watch | Hassan, Karnataka: Ruthvi AM, a 12-year-old yoga practitioner who has made it to the Book of World Records, performs yogasanas ahead of the International Day of Yoga.#YogaDay2025 #yoga pic.twitter.com/I4ZPDTto0Z
— The Times Of India (@timesofindia) June 21, 2025
அந்த வகையில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயப்பட்டணாவை சேர்ந்த பிருத்வி(13) என்ற மாணவி ஒரே நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் ஒரே நிமிடத்தில் உடலை வளைத்து, நெளிந்து செய்யும் யோகாசனங்கள் அனைவரையும் ஈர்த்தது. மேலும் அவர் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்வதாகவும், சுமார் 600 ஆசனங்களை அவர் செய்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை செய்து பிருத்வி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பலரது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!