அசத்தல்!! கூடைப்பந்து விளையாடியபடியே ஸ்கேட்டிங் !! உலக சாதனை படைத்த தமிழக சிறுவர்கள் !!

 
ஸ்கேட்டிங்

காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுவர்-சிறுமியர் 70 பேர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த அகாடமியில் பயிற்சி பெறும் சிறுவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். 

இந்த நிலையில், ஸ்கேட்டிங் பயிற்சி விளையாட்டு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் புதிய முயற்சியாக ஸ்கேட்டிங் செய்து கொண்டே, கூடைப்பந்தினை தட்டிச் செல்லும் விளையாட்டில் உலக சாதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

ஸ்கேட்டிங்

இதில், ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் 15 சிறுவர்-சிறுமிகள், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக கைப்பந்தை தட்டியவாறு ஸ்கேட்டிங் செய்தனர். உலக சாதனை படைக்கும் முயற்சியில் இதில் ஈடுபட்டனர். 

ஸ்கேட்டிங்

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தின் சார்பில் நடுவர்கள் நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவர் சிறுமியர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி சீனிவாசன் சான்றிதழ்களையும் கேடயத்தையும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web