வீட்டில் செல்வம் கொழிக்க போகி வழிபாடு | லட்சுமி கடாட்சம் பெருக நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!
போகிப் பண்டிகை என்பது வெறும் குப்பைகளை எரிக்கும் நாளல்ல; அது நம் மனதின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கும் புனிதமான நாள்.
செல்வம் பெருகச் செய்யும் 'நிலைப்பொங்கல்' தான் போகி. போகி அன்று வீட்டின் தலைவாசலுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்வது வறுமையை நீக்கிச் செல்வத்தைச் சேர்க்கும். நிலை வாசலில் மஞ்சள் பூசி, குங்குமம் இடுவது மங்கலகரமான சூழலை உருவாக்கும். வேப்பிலை, ஆவாரம்பூ, மற்றும் பூலாப்பூ (கண்ணுப்பீழை) ஆகியவற்றை இணைத்துக் காப்பு கட்டுவது, வீட்டிற்குள் நோய் நொடிகள் வராமல் தடுத்து, நேர்மறை சக்தியை ஈர்க்கும்.

மழைக்கும் போகத்திற்கும் (செல்வம்) அதிபதியான இந்திரனை இன்று வணங்க வேண்டும். விவசாயிகள் தங்களின் ஏர் மற்றும் விவசாயக் கருவிகளுக்குச் சந்தனம், குங்குமம் இட்டு வணங்குவது ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும்.
இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோஹ்ரி (Lohri), அசாம் மாநிலத்தில் போகாலி பிகு (Bhogali Bihu), தென்னிந்தியாவில் போகி (Bhogi) என்று கொண்டாடப்படுகிறது.

இன்று புதிதாக விளைந்த அரிசி, வெல்லம் அல்லது தானியங்களை இல்லாதவர்களுக்குத் தானம் செய்வது புண்ணியத்தைத் தரும். அரிசி மாவினால் கோலமிட்டு, அதன் நடுவே சாணம் பிடித்து வைத்து பூசணிப் பூவை வைப்பது 'லக்ஷ்மி கடாட்சத்தை' வீட்டிற்குள் கொண்டு வரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
