நல்ல பாம்புக்கு ஆராதனை! உத்திரமேரூர் அருகே பாரம்பரிய வழிபாடு!
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வினோத வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மேற்கொண்டு வரும் பாம்பு வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே, அருகில் உள்ள காடுகள் மற்றும் விளைநிலங்களுக்குச் செல்லும் பழங்குடியினர், அங்கிருக்கும் நஞ்சுள்ள 'நல்ல பாம்புகளை' லாவகமாகப் பிடிக்கின்றனர். பிடிபட்ட பாம்பைத் தங்களது வீடுகளுக்குக் கொண்டு வரும் அவர்கள், சில நாட்கள் அதைத் தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். பாம்பின் தலையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பொட்டிட்டு அழகுபடுத்துகின்றனர்.

பின்னர் அந்தப் பாம்பை ஊர் வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு செல்கின்றனர். "பாம்பு வந்திருக்கு" என்ற குரலைக் கேட்டதும், அந்த ஊர் பெண்கள் கற்பூரத் தட்டுடன் வந்து உயிருள்ள பாம்பிற்குத் தீபாராதனை காட்டி பயபக்தியுடன் வணங்குகின்றனர்.
இந்த வழிபாட்டிற்குப் பிரதிபலனாகப் பழங்குடியின மக்களுக்கு அரிசி அல்லது சிறு தொகையை ஊர் மக்கள் காணிக்கையாக வழங்குகின்றனர்.பாதுகாப்பான விடைபெறுதல்: சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, அந்தப் பாம்பிற்கு எவ்விதத் தீங்கும் செய்யாமல், மீண்டும் அது பிடிபட்ட அதே காட்டுப் பகுதியிலேயே கொண்டு போய் பத்திரமாக விட்டுவிடுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
