செல்வ வளம் தரும் அமாவாசை வழிபாடு... இதை செய்ய மறக்காதீங்க!

 
காசு செல்வம் மகாலட்சுமி பூஜை
இன்று மாசி அமாவாசை தினம். சிவ வழிபாட்டிற்கு மிக உகந்த தினம். பொதுவாகவே பெளர்ணமி தினத்தைப் போலவே நினைத்த காரியங்களை நிறைவேற்றி வைக்கும் சக்தி அமாவாசை வழிபாட்டிற்கும் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் சிவனுக்கு உகந்த மாசி அமாவாசை தினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் சிவ வழிபாடு சிறப்பான பலன்களை தரவல்லது. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் அனைத்து  பிரார்த்தனைகள் வேண்டுதல்களும் நிறைவேறும்.

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இன்றைய சமையலில் புடலங்காயை சேர்த்துக் கொள்வது மிகவும் விசேஷம். அதே போல் இந்நாளில் பித்ருக்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து வீட்டிலேயே எளிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பித்ரு வழிபாட்டிற்கு ஆசைகளை நிறைவேற்றித் தரக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. வம்சம் தழைக்க வேண்டும் என முதலில் வந்து நமக்கு உதவி செய்வது பித்ருக்கள் தான்.

லிங்கத்தை வைத்திருப்பவர்கள் அதற்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் இவைகளால் அபிஷேகம் செய்து வழிபடலாம். வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவ ஸ்தோத்திரங்களை உச்சரித்து, சிவவழிபாடு மேற்கொண்டால் முன்வினை  பாவங்கள்  நீங்குவதாக ஐதீகம்.

அதே போல் இன்று விநாயகருக்கு உகந்த அரச மர இலைகளை பறித்து வந்து விநாயகருக்கு முன்பாக ஒற்றை படையில் அரச இலைகளை அடுக்கி வைத்து, அதன் மீது ஒற்றை அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். 

அரச இலை விளக்கு

இப்படி செய்வதால்  நீண்ட நாள்  பிரார்த்தனைகள் நிறைவேறும். இத்துடன் பசுவிற்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, பச்சரிசி - வெல்லம் இவைகளையும் தானமாக கொடுக்கலாம். இதனால்  தொடர் தோல்விகள் வெற்றியாக மாறும் வாய்ப்புக்கள் அதிகம். இந்த அற்புத சக்தி வாய்ந்த அமாவாசை தினத்தில் பித்ரு வழிபாட்டையும் அதனைத் தொடர்ந்து இறை வழிபாட்டையும்  மேற்கொண்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சிவன் தாள் பணிவோம். சிவன் அருள் பெறுவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web