ரூ.4 கோடி வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார் வினேஷ் போகத்... குவியும் வாழ்த்துக்கள்!

 
வினேஷ் போகத்
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர்  காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் கூட.இந்நிலையில்  வினேஷ் போகத்துக்கு ஹரியானா அரசு அதன் விளையாட்டுக் கொள்கையின் கீழ் அதிரடி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதில் அவர் ரூ.4 கோடி ரொக்கப் பரிசை ஏற்றுக்கொள்ளத் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஹரியானா அரசாங்கத்தின் விளையாட்டுக் கொள்கை ஒலிம்பிக் வீரர்கள் உட்பட சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறையில் துணை இயக்குநர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட  அமைச்சரவைக் கூட்டத்தில், ஜூலானா எம்.எல்.ஏ.வான  வினேஷ் போகத்துக்கு  விளையாட்டுக் கொள்கையின் கீழ் மூன்று வெகுமதிகளில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூ.4 கோடி ரொக்கப் பரிசு, "குரூப் ஏ" வேலை அல்லது ஹரியானா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு நிலம் ஆகிய ஒதுக்கீடு என 3 வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. 

வினேஷ் போகத்

சட்டமன்ற உறுப்பினராக உள்ள வினேஷ் போகத் அரசாங்கப் பதவியைத் தேர்வு செய்ய முடியாது. இதனையடுத்து  ரூ.4 கோடி பணத்தைத் தேர்வு செய்துள்ளார். 2  வாரங்கள் கழித்து தனது முடிவை அரசுக்குத் தெரிவித்துள்ளார். போகத்தின் முடிவை மாநில விளையாட்டுத் துறைக்குத் தெரிவிக்கும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.  அதே போல்  குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு நிலத்தை வாங்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.
 

வினேஷ் போகத்
மார்ச் 25ம் தேதி   நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில்  பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “வினேஷ் போகத் இப்போது எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் எந்தெந்த சலுகைகளைப் பெற விரும்புகிறார் என அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.  மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் படி, வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்கள் இந்த 3 நன்மைகளுக்கும் தகுதியுடையவர்கள் எனவும் சைனி குறிப்பிட்டுள்ளார்.  
பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  இறுதிப்போட்டிக்குச் சற்று முன்பாக 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வினேஷ் போகத் கூட்டாக வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web