WWE ஜாம்பவான் ஜான் சீனா திடீர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஜான் சீனா

சுமார் 20 ஆண்டுகளாக WWE மல்யுத்தப் போட்டிகளில் சூப்பர்ஸ்டாராகத் திகழ்ந்து, 17 முறை சாம்பியன் பட்டம் வென்ற உலகப் புகழ்பெற்ற வீரர் ஜான் சீனா, வரும் டிசம்பர் 13-ஆம் தேதியுடன் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் சீனா 2002-ஆம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமானார். அவருடைய தனித்துவமான மல்யுத்த உத்திகள் மற்றும் உற்சாகமான என்ட்ரி இசை ஆகியவை அவரை உலகளவில் சூப்பர்ஸ்டாராக உயர்த்தின.

ஜான் சீனா

தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்ட WWE ஜாம்பவான்களுடன் அவர் மோதிய போட்டிகள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. மல்யுத்தத்தைத் தவிர, ஜான் சீனா 'தி சூசைட் ஸ்குவாட்', 'ஃப்ரீலான்ஸ்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், 'பீஸ்மேக்கர்' வெப் தொடரிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

WWE  ஜான் சீனா

ஓய்வுக்குப் பிறகு, அவர் தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு சமீபத்திய நேர்காணலில், தான் தொடர்ந்து WWE-ன் தூதராகப் (WWE ambassador) பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!