நீயும் , நானும் ஒண்ணுடா!! தமிழர் விசேஷத்திற்கு சீர்வரிசை தட்டுக்களுடன் வடமாநிலத்தவர்!!

 
சீர்வரிசை

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து வடமாநிலத் தொழிலாளர்கள் சாரை சாரையாக சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையங்களில் குவிந்தனர்.  இதனையடுத்து பீகாரிலிருந்து மத்திய குழு ஒன்று தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. பீகார் முதல்வரிடம் தமிழக முதல்வர் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.  இதன் பிறகு படிப்படியாக இந்த பிரச்சனை குறையத் தொடங்கியது. தவறான தகவல் பரப்புபவர்கள்க்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது.  இந்நிலையில், பூவிருந்தவல்லி அருகே நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை குடும்ப உறுப்பினராக பாவித்து முக்கியத்துவம் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்களாக பாவித்து பத்திரிக்கை வைத்து, அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அழைப்பை ஏற்றுக்கொண்ட 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சகோதரத்துவ எண்ணத்தை வெளிகாட்டும் வகையில், கையில் சீர்வரிசை தட்டுகளுடன் வந்து விழாவையே அசத்தினர். இது விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

chennai

இதைத்தொடர்ந்து உறவினர்கள் போல் பெண்ணிற்கு நலங்கு வைத்து, மலர்தூவி ஆசீர்வாதம் அளித்தனர். அதேபோல் விழாவிற்கு வந்திருந்த அனைத்து வட மாநில தொழிலாளர்களும் முக்கியத்துவத்துடன் வந்திருந்தவர்களுக்கு உணவை பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web