இன்றே ரூ6000 நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்..!

 
மிக்ஜாம்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து வெள்ள நிவாரண நிதியாக  குறிப்பிட்ட   4 மாவட்டங்களில்   ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வீடு வீடாக டோக்கன்கள் தரப்பட்டன. இந்நிலையில் டோக்கன் எல்லாம் தேவையில்லை இனி இன்றே  புயல் நிவாரண தொகையை  பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்

மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு   மாவட்டங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம்  ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6,000 வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப டிசம்பர் 17ம் தேதி முதல்  வழங்கப்பட்டு வருகிறது.  

மிக்ஜாம்


இந்நிலையில், சென்னை உட்பட  4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23 ம் தேதி வரை   நிவாரண தொகை பெற டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இன்றே நிவாரணத் தொகை  பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web