ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு போலாம்!

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். பொதுப்போக்குவரத்தில் முதன்மையான இடத்தில் இருப்பவை ரயில் போக்குவரத்துகள் தான். ரயில்கள் மூலம் தான் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் தினமும் 19000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஏராளமான அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப வழித்தடங்களும் மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை - அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ வரை வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மற்றொரு முக்கிய வழித்தடமாக இருக்கும் சென்னை விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி பிரிவில் ரயில்கள் 90 கிமீ முதல் 100 கிமீ வரையிலான வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தண்டவாளம் சீரமைப்பு, சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் சென்னை விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி வழித்தடத்தில் ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறையும் எனக் கூறியுள்ளனர். இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 3.50 மணி நேர நிமிடங்கள் செல்கின்றன. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 5 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 4 முதல் 4.30 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
இது மட்டுமின்றி வந்தே பாரத், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 3 முதல் 3.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல முடியும். இந்த பயண நேரம் குறைப்பு காரணமாக சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரயில்கள் 9 முதல் 9.30 மணி நேரத்தில் சென்று விடலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!