தாய்க்கு பராமரிப்பு தொகை கொடுக்க முடியாது... மேல்முறையீடு செய்த மகனுக்கு ரூ.50,000 அபராதம்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
உயர்நீதிமன்றம்


 
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து திருமணம் செய்து வாழ்க்கையை அமைத்து தருகின்றனர். அவர்களின் வயதானகாலத்தில் பிள்ளைகள் யாரும் அவர்களை வைத்து பராமரிக்க தயாராக இல்லை. இது போன்ற வழக்குகள் இந்தியா முழுவதும் தொடர்கதையாகி வருகின்றன.  

முதியவர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர்  பாக் சிங். இவரது இறப்புக்குப் பின் அவருக்குச் சொந்தமான 12.5 ஹெக்டேர் நிலம் அவரது மகன் சிக்கந்தருக்கும், இறந்துவிட்ட இன்னொரு மகன் சுரீந்தரின் குடும்பத்துக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாக் சிங்கின் மனைவி அமர்ஜித் கவுர் தனது மகளுடன் வாழ வேண்டும் என  கூறிவிட்டனர். இதனால்  சிக்கந்தரும், சுரீந்தரின் மனைவியும் தனது அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் அளிக்க வேண்டும் என்று தாய் இவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிக்கந்தரும் சுரீந்தரின் மனைவியும் அமர்ஜித் கவுருக்கு மாதம் ரூ.5000 அளிக்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான சிக்கந்தர்  மேல் முறையீடு செய்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு, நாம் கலி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த சான்று  என நீதிபதி கூறினார். அத்துடன்  தன்னுடைய தாய்க்கு பராமரிப்புத் தொகை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நபருக்கு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web