"அமெரிக்கர்களைத் திருமணம் செய்தாலும் கிரீன் கார்டு கிடையாது" - டிரம்பின் புதிய கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் கவலை!
அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டு முன்னுரிமையில், முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு டிரம்ப் நிர்வாகம் புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி, அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்து கொண்டால் மட்டும் கிரீன் கார்டு கிடைத்துவிடாது. கணவன் - மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் உண்மையான தம்பதிகளா அல்லது கிரீன் கார்டு பெறுவதற்காக மட்டும் 'ஒப்பந்தத் திருமணம்' (Contract Marriage) செய்து கொண்டார்களா என்பதை அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்வார்கள். பொதுவாக வேலை, படிப்பு அல்லது வேறு வசதிகளுக்காகத் தம்பதிகள் வெவ்வேறு நகரங்களில் வசிப்பதாகக் கூறுவதுண்டு. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இனி இத்தகைய காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் ஒரே கூரையின் கீழ் வசிக்கவில்லை என்றால், அந்தத் திருமணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. குடியுரிமை அதிகாரிகள் நேரடியாக விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கே சென்று ஆய்வு நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கும் இந்த கிரீன் கார்டைப் பெற, பலர் முறைகேடாகத் திருமணப் பதிவுகளை மேற்கொள்வதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்கவே, டிரம்ப் தனது குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கிப் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ செல்லும் வெளிநாட்டினர், அங்கேயே குடியுரிமை பெற அமெரிக்கர்களைத் திருமணம் செய்வது வழக்கம். டிரம்பின் இந்த புதிய விதியால், குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விண்ணப்பதாரர்கள் கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
