பெண்களே உஷார்.... தலையில் தினமும் தேங்காய் எண்ணெய் வைக்க தேவையில்ல... மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்!

தலைமுடி செழிப்பாக வளர சிலர் தினமும் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்கின்றனர். இது குறித்து தோல் மருத்துவர் டாக்டர் வந்தனா சில குறிப்புகளை கூறியுள்ளார். நம்முடைய தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கிறது அதுவே போதுமானது . தினமும் தேங்காய் எண்ணெய் வைத்தால் அது அழுக்குகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.இதனால் முடி உதிரத் தொடங்கும்.
மேலும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் வைத்தாலே போதுமானது . தினமும் எண்ணெய் வைப்பதால் தலையில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். இதனால் தான் பொடுகு பிரச்சனை ஏற்படும் தலையில் வறண்ட வேர்களை உடையவர்கள் மட்டும் தினமும் எண்ணெய் வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். தலையில் எண்ணெய் வைப்பதால் முடியின் வேர் கால்கள் மேம்பட்டு கூந்தலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கான தீர்வாக இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலையில் எண்ணெய் தேய்த்தால் 1-2 மணி நேரம் வரை வைத்து விட்டு தேய்த்து குளித்து விடலாம். அதிக நேரம் தலையில் எண்ணெய் இருப்பது அது கிருமிகள் மற்றும் அழுக்குகளை தான் கொண்டு வந்து சேர்க்கும். முடி வளர்ச்சி என்பது ஜெனிடிக் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமே நடைபெறுவதாக கூறியுள்ளார். ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் காரணமாக தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. சிலருக்கு முடி உதிர்வு பிரச்சனை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!