தவெக தனித்துவமாக இயங்க வேண்டும்... திருமா அட்வைஸ்!
விடுதலைச் சிறுத்தைகள் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன் எம்.பி., தவெக தலைவர் விஜய் குறித்து நேரடியாக கருத்து பகிர்ந்தார். “விஜய் அரசியலுக்கு வருவதை முதலில் நான் வரவேற்றேன். அவர் தனித்துவம் கொண்ட பாதையில் நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தொடங்கிய அவர், சமீபத்திய அரசியல் நகர்வுகள் தனது நம்பிக்கையை சற்றுக் குலைக்கின்றன என்றும் கூறினார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து, “அவர் எந்த காரணத்தால் சேர்ந்தார் என தெரியாது. ஆனால் தமிழக அரசியலில் இன்று நடக்கும் பல மாற்றங்களின் பின்னணியில் பா.ஜ.க.வின் தாக்கத்தை மறுக்க முடியாது. அதிமுக இன்று சந்திக்கும் குழப்பத்திற்கும் பா.ஜ.க. ஒன்றுகாரணம் என்பதை அவர்களே உணர்வார்கள்” என்று அவர் வலியுறுத்தினார். பா.ஜ.க.வுடன் விஜய் காட்டும் அணுகுமுறை எதிர்மறையாகப் புரிந்துகொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஈழத் தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த அவர், இலங்கையின் புதிய அரசமைப்பில் கூட்டாட்சி, தன்னாட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும் என்றார். தமிழக அரசு இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டிய அவர், “தமிழகம் பா.ஜ.க.–சங் பரிவார அரசியலை எப்போதும் சந்தேகம் கொண்டே பார்கிறது. தவெக தனித்துவமாக இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையே அதன் முன்னேற்றத் திறவுகோல்” என்று முடிவுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
