“ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கணும், இல்ல இந்த பக்கம்‌ நிக்கணும்... நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார்” - விஜய்யை விளாசிய அண்ணாமலை!

 
அண்ணாமலை

புதுச்சேரியில் முருக பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற தீபப் போராட்டம் மற்றும் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கத்தைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின்போது, 'அரோகரா' கோஷத்துடன் திருப்பரங்குன்றம் மாதிரித் தீபத் தூண் வைத்துத் தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது குறித்து அண்ணாமலை விமர்சித்தபோது, அரசியல் களத்தில் நடுநிலை வகிப்பது குறித்துப் பேசினார்: "ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கனும், இல்ல இந்த பக்கம்‌ நிக்கனும், ரோட்டுக்கு‌ நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார். நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சிப் பொறுப்பைக் கொடுப்பார்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

தவறு எது, சரி எது என்பதைத் த.வெ.க. தலைவர் விஜய் நியாயப்படியும், மக்கள் உணர்வுப்படியும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "கம்முனு இருக்கும் இடத்தில் கம்முனு இருக்கனும், கும்முனு இருக்குற இடத்தில் கும்முனு இருக்குனும்னு தான் விஜய் இருக்கிறார்" என்றும் அண்ணாமலை சாடினார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல என்று அண்ணாமலை மீண்டும் வலியுறுத்தினார்.

விஜய் தவெக

பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் பற்றி ஏன் பேசவில்லை? நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மீதியுள்ள 423 எம்.பிக்களும் முருக பக்தர்கள், சிவ பக்தர்களாக நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என்றும், இந்தத் தீர்மானம் தோற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கையெழுத்திட்ட எம்.பிக்கள் அனைவரும் வரும் தேர்தலில் தோற்பது உறுதி என்றும் அண்ணாமலை ஆவேசமாகக் கூறினார்.

மகாத்மா காந்தியின் பெயர் குறித்த காங்கிரஸ் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அண்ணாமலை, "விக்ஷித் நாடு" (வளர்ந்த நாடு) என்ற பெயரை பாஜக கொண்டு வந்துள்ளதை காந்தியே ஒப்புக் கொள்வார் என்றார். 2016க்கு பிறகு காந்தியின் பெயரைப் பல இடங்களில் வைத்ததற்கான பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும், அதைப் பற்றி காங்கிரஸ் ஏன் பேசவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!