"நீயா... நானா?" - அவனியாபுரத்தில் மல்லுக்கட்டிய வீரர்... வியந்து பார்த்த மதுரை கலெக்டர்!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாடிவாசலில் இருந்து சீறிவந்த ஒரு காளையை வீரர் ஒருவர் விடாமல் மல்லுக்கட்டிய விதம் அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
"மனுஷனா... இல்ல மலையா?" என்று கேட்கும் அளவிற்கு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று ஒரு மாடுபிடி வீரருக்கும், திமிறி வந்த காளைக்கும் இடையே நடந்த 'நேருக்கு நேர்' போராட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டி தொடங்கி சில மணி நேரங்கள் கடந்த நிலையில், வாடிவாசலில் இருந்து ஒரு கருப்பு நிறக் காளை சீறிக்கொண்டு வெளிவந்தது. அந்தக் காளையை அடக்க பல வீரர்கள் முயன்ற நிலையில், ஒரு வீரர் மட்டும் அதன் திமிலைப் பிடித்துத் தொங்கினார்.
காளை அவரைத் தூக்கிப் போட்டு மிதிக்க முயன்ற போதும், சுமார் 50 மீட்டருக்கும் மேலாக அந்த வீரர் காளையை விடாமல் மல்லுக்கட்டினார். "நீயா... நானான்னு பாத்துரலாம்" என்பது போல அந்த வீரரின் பிடி அத்தனை உறுதியாக இருந்தது.
மேடையில் அமர்ந்து போட்டியைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர், இந்த வீரச் சமரைக் கண்டு இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டார். வீரரின் துணிச்சலைப் பார்த்து வியந்து போன அவர், தனது கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தியதுடன், முகத்தில் ஆச்சரியமான ரியாக்ஷன்களைக் கொடுத்தார்.
இறுதியில் அந்த வீரர் காளையை வெற்றிகரமாக அடக்கினார். அவரது வீரத்தைப் பாராட்டி உடனடியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் இந்த நெகிழ்ச்சியான ரியாக்ஷன் மற்றும் வீரரின் அந்தப் போராட்டம் தற்போது ஜல்லிக்கட்டுப் பிரியர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
