நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்... அமித்ஷாவுக்கு நக்கலாக பதில் அளித்த கனிமொழி !

மத்திய அமைச்சர் அமித்ஷா ஹிந்தி மொழியால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள். அனைவரும் அவரவர் மொழிகளுடன் இந்தியையும் கற்றுக் கொள்வதால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம். https://t.co/7Ku31af68O
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 26, 2025
ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது எனக் கூறியிருந்தார். இதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "சரியாகச் சொன்னீங்க. அதையேதான் நாங்களும் சொல்கிறோம்.
நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!