பிரபல பெண் யூடியூபர் தற்கொலை... திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் விபரீதம்!
விசாகப்பட்டினம் சேர்ந்த 21 வயது கோமலி, ஐதராபாத்தில் படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியூட்டி பார்லர் உரிமையாளரின் மகனான நிகில் ரெட்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் மீது ஒருதலைக் காதல் கொண்டதாக கூறப்படுகிறது. நிகில் ரெட்டிக்கு ஐதராபாத் சித்ரபுரி காலனியில் வேலை கிடைத்ததால் அங்கு தங்கி வந்தார்.

கோமலிக்கும் ஐதராபாத்தில் உள்ள மல்லரெட்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. பின்னர் அவர் சித்ரபுரி காலனிக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நிகிலை திருமணம் செய்யுமாறு கேட்டபோது, நண்பர்கள் மட்டுமே என அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த கோமலி, மீண்டும் திருமணத்துக்கு வற்புறுத்தியபோதும் மறுப்பு கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 23ஆம் தேதி இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது அறையில் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் காதல் தொடர்பான குறிப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
