கல்யாணமாகி 3 மாசம் கூட ஆகல... வரதட்சிணை கொடுமையால் இளம் மருமகள் தற்கொலை!
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் ஜந்தம்பூர் பகுதியை சேர்ந்த நேஹா (20) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த நவம்பர் 22-ம் தேதி விவேக் (24) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அவர் கணவர் குடும்பத்துடன் துல்ஹி பகுதியில் வசித்து வந்தார்.

திருமணம் நடந்த நாளிலிருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் நேஹாவை தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நேஹா, நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நேஹாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் கணவர் விவேக், அவரது தாய் மீனா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான 8 வாரங்களிலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
