பாடாய் படுத்தும் ரீல்ஸ் மோகத்தால் பறிபோன இளம்பெண் உயிர்!! தொடரும் சோகம்!!

 
பைக் சாகசம்

இன்றைய இளைய தலைமுறை எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், கொண்டாட்டங்கள் மட்டுமல்ல , இந்த மோகம் விபத்து நடைபெறும் இடங்கள், மருத்துவமனைகள், துக்க வீடு வரை தொடர்கிறது. இதனால் பல நேரங்களில் அசம்பாவிதங்கள், பேராபத்துக்கள் நிகழ்ந்து விடுகின்றன. இருந்தாலும் இதனை இன்றைய இளைஞர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. ரீல்ஸ் மோகத்தால் உயிரைவிட்ட சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 6 ) மாலை 5 மணி அளவில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் சாலையில் பைக் ஓட்டி சாகச செயல்களில் ஈடுபட்டனர்.

Dead-body

மேலும், இந்த பைக் சாகசங்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர்கள் எடுத்து வந்துள்ளனர். மக்கள் வந்து செல்லும் என்ற சாலை என்று எண்ணாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில், அந்த சாலையில் பெரோஸ் பதான் (31) என்ற பெண் ஸ்கூட்டியில் வந்துள்ளார். 

அப்போது ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்த ஆர்வத்தில் பெண் வருவதை கவனிக்காமல் பெண்ணின் ஸ்கூட்டி மீது இருவரும் தங்களின் பைக்கை வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதில் பெரோஸ்சின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இரு வாலிபர்களும் பயந்து தப்பியோடியுள்ளனர். 

Police-arrest

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, அயன் ஷேக், ஜாவித் ஷேக் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web