எவ்வளவு சிரமம்... அசால்டாக தினந்தோறும் 22 மணி நேரம் தூங்கும் இளம்பெண்..!

 
ஜோனா காக்ஸ்

தூக்கத்தை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என இன்றைய காலத்தில் பலரும் புலம்புவதை பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஒரு பெண் தனது தூக்கத்தை எப்படி தொலைப்பது என்று தவித்து வருகிறார். காரணம், இவருக்கு ஒரு நாளைக்கு 18இல் இருந்து 22 மணிநேரம் தூக்கம் வருகிறதாம். இவருக்கு இருப்பது அரிய வகை நோய் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் வசிப்ப 38 வயதான ஜோனா காக்ஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ஜோனா காக்ஸ், 2017 ஆண்டில் இருந்து உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட்டது. இரவு, பகல் வேறுபாடு இன்றி நீண்டநேரம் தூங்கியுள்ளார். 

ஜோனா காக்ஸ்

நாளடைவில் இது தீவிரமடைய இவரால் பகல் பொழுதில் வேலை பார்க்க முடியவேயில்லை. நேரம் காலம் அறியாமல் தூக்கம் வரவே, 2019இல் இவர் தனது வேலை விடும் சூழலுக்கு தள்ளப்பட்டார். ஒவ்வொரு மருத்துவர்களாக அனுகியபோதும், தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் தனக்கு idiopathic hypersomnia என்ற அரிய வகை நோய் இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த இடியோபாடிக் ஹைப்பர்சோம்னியா என்பது அரிய வகை அசாதாரண தூக்க கோளாறு நோயாகும். இந்த நோய் இருப்பவர்களால் இரவில் நன்கு தூங்கினாலும், பகலிலும் கடும் தூக்கத்திற்கு ஆளாவர்கள் என மருத்துவர்கள் கூறினர். இதற்கான காரணம், சிகிச்சை ஆகியவை இன்னும் முறையாக கண்டறியப்படவில்லை. உலகில் வெகு சிலருக்கே இந்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். 

ஜோனா காக்ஸ்

ஜோனா காக்ஸ் ஒரு நாளில் 18 முதல் 22 மணிநேரம் வரை தூங்கியே கழிப்பதாக கூறும் இவர், தனது வாழ்க்கையையே தூக்கம் சீரழிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். கார் ஓட்டும்போது கூட தூக்கம் வருவதாக அவர் தெரிவித்தார். தனது மகள்களுக்கு வெளியே சென்று நேரத்தை கழிக்க முடியாத அவலமான வாழக்கையை கொண்டுள்ளதாக ஜோனா ஆதங்கத்துடன் கூறுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web