திருமண ஆசைக்காட்டி இளம்பெண் வருடக்கணக்கில் பலாத்காரம்.. பிரபல தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்ய முயற்சித்து, குட்டு வெளிப்பட்டதால் தற்கொலை!

 
நிஷாந்த்

பல வருடங்களாக இளம்பெண்ணை காதலித்து, உடலுறவும் வைத்திருந்த நிலையில், பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளைத் திருமணம் செய்ய முயன்ற இளைஞர், காதலி திருமணத்தை நிறுத்தியதால், போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சென்னை போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் இளம்பெண் சூர்யா (27). இவர் 10ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. அதன் பின்னர், இருவரும் கல்லூரியில் சேர்ந்த பின்னரும், இவர்களின் காதல் வீட்டிற்குத் தெரியாமல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், சூர்யாவைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை நிஷாந்த் பலாத்காரம் செய்துள்ளார். அதே போல், சூர்யாவிடம் இருந்து பலமுறைகளாக சிறிது சிறிதாக ரூ. 68 லட்சம் வரையில் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, நிஷாந்த் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல், காலந்தாழ்த்தி, ஏமாற்றி வருவதை உணர்ந்த இளம்பெண் சூர்யா, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளாமல் அதன் பின்னரும்  காலம் தாழ்த்தி வந்துள்ளார் நிஷாந்த். 

Porur

இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிஇஓ வாக பணிபுரிபவரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்தார். தன்னை இத்தனை வருடங்களாக காதலித்து, உடலுறவும் வைத்து கொண்டு தற்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிந்து கொண்ட  இளம்பெண் சூர்யா, இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையில் தொழில் அதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, நிஷாந்த் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக நிஷாந்தின் பெற்றோரிடம் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிஇஓ மகளை திருமணம் செய்து ஏமாற்ற முயன்ற நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

Virugambakkam

நிஷாந்தின் உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாலியல் வழக்கு, பணமோசடி, திருமணம் நின்ற நிலையில் போரூர் ஏரியில் குதித்து நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனது நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, ஏரியில் நிஷாந்த் குதித்தாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web