மொபைலில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் சென்ற இளம் உளவுத்துறை அதிகாரி மரணம்!

இந்தியாவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்தவர் மேகா. 25 வயதான இவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்தானம்திட்ட மாவட்டம் கரக்கக்குழி பூழிக்காடு பகுதியில் வசித்து வந்த மேகா, ஓய்வு பெற்ற அரசு ஐடிஐ முதல்வர் மாதுசூதனனின் ஒரே மகளாகவார்.
இவர் நேற்று திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு பெட்டா மற்றும் சக்கா ரயில்வே நிலையங்களுக்கு இடையில் அவரது உடல் ரயில்வே தடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், பெட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலருகே இருந்த குடியேற்ற நுண்ணறிவு பணியக அடையாள அட்டையின் மூலம் உயிரிழந்தவர் மேகா என்பதைக் கண்டறிந்தனர். கடந்த இரவு விமான நிலையத்தில் டியூட்டி முடித்துவிட்டு வீடு திரும்பிய மேகா, சம்பவத்தன்று ரயில்வே பாதையில் செல்கையில், திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார்.
ரயில் ஓட்டுநர் மேகா தண்டவாளத்தில் போன் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, திடீரென ரயில் வருவதை கண்டு தலையை தண்டவாளத்திற்கு குறுக்காக வைத்து படுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார். மேகா, ஒரு நுண்ணறிவு அதிகாரி என்பதால், பெட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் அவர் யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்பதையும் கண்டறிவதற்காக சைபர் கிரைம் போலீசார் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.
மேகா, ஃபொரென்ஸிக் சயின்ஸ் படிப்பை முடித்து, ஒரு வருடத்திற்கு முன்பு குடியேற்ற நுண்ணறிவு பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். கடந்த மாதம், கரக்கக்குழி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்க தனது ஊருக்கு வந்திருந்தார். அவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!