இளைஞர் அடித்து கொலை... உறவினர் பழிக்கு பழி!
கோவை செல்வபுரம் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் கடந்த ஆண்டு நண்பர்களுடன் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் உறவினரான ஜப்பான் என்ற பிரவீன்குமாரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் ஜாமீனில் வெளியே வந்து மைசூரில் வேலை செய்து வந்தார்.

கோர்ட்டில் ஆஜராக கோவை வந்திருந்த பிரவீன்குமார், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, “நண்பரை கொலை செய்துவிட்டு சுகமாக இருக்கிறாயா?” என கேட்டு இரண்டு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் அவர்கள் பிரவீன்குமாரை கை, கல்லால் சரமாரியாக தாக்கினர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், கோகுல கிருஷ்ணனின் நண்பர்களான மனோஷ் மற்றும் கண்ணன் தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசாரை பார்த்து தப்ப முயன்ற போது கால் முறிந்ததால் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே பகுதி, ஒரே விரோதம். முடிவில் பழிக்குப் பழி தீர்ந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
