திருமண நாளில் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு... இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்!

 
கேரளா
 

கேரள மாநிலம் ஸ்ரீகர்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். செம்பாழந்தி செல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு மின்சாரப் பேருந்து மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

இறந்த ராகேஷ்க்கு கத்தைக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் அதே நாளில் காலை கோயிலில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இரு குடும்பங்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், முதலில் கோயிலில் திருமணம் செய்து பின்னர் பதிவு செய்ய முடிவு செய்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதற்காக சந்தவிலா பகுதியில் ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

போலீஸ்

திருமணத்திற்கு முன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ராகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து ஸ்ரீகர்யம் போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், உடற்கூராய்வு முடிந்த பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!