கோவாவில் இரட்டைக் கொலை செய்த ரஷ்ய இளைஞர்.... பயங்கரம்!
கோவா மாநிலத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி லியோனோவ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தனது தோழிகளான எலினா வானீவா மற்றும் எலினா கஸ்தானோவா ஆகிய இரு பெண்களை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது, நடனக் கலைஞரான கஸ்தானோவா ரப்பர் கிரீடம் மற்றும் பணம் வாங்கியதால் அலெக்சி கோபமடைந்து ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் இருவரையும் வெவ்வேறு இடங்களில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். போலீசார் தெரிவிப்பதாவது, இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை, அப்போது ஏற்பட்ட கோபத்தால் தூண்டப்பட்டதாக இருக்கலாம்.
கைதான அலெக்சி மனநலப் பிரச்சனையுடன் இருப்பவர் என்றும், போதைப்பொருள் பழக்கம் கொண்டவராகவும் இருக்கிறார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் அவரின் கைபேசியில் இருந்ததால், தொடர் கொலையாளராக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி கோவாவில் மர்மமாக உயிரிழந்த மிருதுஸ்மிதா சைங்கியா சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் ஆராய்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
