காதலிக்காக ரயில் நடைமேடையில் பைக் ஓட்டிய இளைஞர்... பரபரப்பு வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது காதலியை ரயிலில் ஏற்றுவதற்காக வாலிபர் ஒருவர் ரயில்வே நடைமேடையில் பைக்கை ஓட்டிச் சென்றார். பயணிகள் கூட்டம் நிறைந்த நிலையிலும் எதற்கும் அஞ்சாமல் அவர் அதிவேகமாக சென்றார்.
गर्लफ्रेंड को ट्रेन में बैठाना था, भाई साहब ने गोरखपुर रेलवे प्लेटफॉर्म पर दौड़ा दी बाइक... pic.twitter.com/jnKsItF9NB
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) January 3, 2026
நடைமேடை எண் 5 மற்றும் 6 இடையே பைக்கில் பறந்த அவர், மேம்பாலம் வழியாக உள்ளே நுழைந்தார். ரயில் புறப்படும் முன் காதலியை ஏற்றிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாதுகாப்புக் குறைபாட்டை காட்டும் இந்த காட்சியை பயணிகள் கைப்பேசியில் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் வாலிபரை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
