பகீர்... பெண்களின் உள்ளாடைகள் திருடி அணிந்து செல்பி எடுத்து பதிவிட்ட இளைஞர் !

 
பெங்களூரு

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பகோதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த அமல் என்பவர், குடியிருப்பு கட்டிடங்களின் முன்புறம் உலர வைத்திருந்த பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று அணிந்து பார்த்ததாக கூறப்படுகிறது.

அதனை அணிந்தபடியே செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பரவியதை அடுத்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அமலை கைது செய்தனர். விசாரணையில் அவர் செய்த செயல்களை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, பல பெண்களின் உள்ளாடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்துள்ளனர். சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!