நர்மதை கரையில் சிறுநீர் கழித்த இளைஞர் … கன்னத்தில் ’பளார்’ விட்ட ஐஏஎஸ் அதிகாரி... சர்ச்சை வீடியோ!
மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் நர்மதை நதிக்கரையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்ததைக் கண்ட ஐஏஎஸ் அதிகாரி கடும் கோபமடைந்தார். புனிதமாகக் கருதப்படும் நர்மதை ஆற்றின் தூய்மையை கெடுக்கும் செயல் இது எனக் கூறி, அந்த இளைஞரை இரண்டு முறை கன்னத்தில் அறைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொது இடங்களில் ஒழுக்கம் அவசியம் என்றும் அவர் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
नरसिंहपुर जिला पंचायत के सीईओ ने नर्मदा नदी में पेशाब करने को लेकर युवक को थप्पड़ मारे, सोशल मीडिया पर वीडियो वायरल @NavbharatTimes #nbtmp #viralvideo pic.twitter.com/PPw6pqIIN9
— NBTMadhyapradesh (@NBTMP) December 30, 2025
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்வின்போது குறுக்கிட்ட கோயில் பூசாரியையும் அந்த அதிகாரி கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. “உயிரோடு புதைத்துவிடுவேன்” என அவர் மிரட்டியதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசு உயர் அதிகாரி சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதும், ஆன்மீகப் பெரியவரைத் தகாத வார்த்தைகளால் மிரட்டியதும் பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
