காதலித்து கரம் பிடித்த இளைஞர்... மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் ... வீடியோவால் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் உறவினர்களால் மின்கம்பத்தில் கட்டி வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய் சந்த் மற்றும் சாய் துர்கா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயிருக்கு பயந்த இந்த காதல் ஜோடி, போலீஸ் பாதுகாப்பை நாடி சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக திருமணம் செய்துகொண்டனர்.
ప్రేమించి పెళ్లి చేసుకున్నందుకు యువకుడిని స్తంభానికి కట్టేసి కొట్టిన యువతి బంధువులు
— ChotaNews App (@ChotaNewsApp) January 1, 2026
ఏలూరు జిల్లా ముసునూరులో దారుణం
ఎనిమిదేళ్లుగా ప్రేమించుకుంటున్న సాయిచంద్, సాయి దుర్గ
ఇంట్లో పెళ్లికి నిరాకరించడంతో రెండు రోజుల క్రితం ప్రేమ వివాహం చేసుకున్న జంట
దింతో సాయి చంద్ ని… pic.twitter.com/cn1AX68WqI
திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மணமகன் சாய் சந்த்தை வழிமறித்து சினிமா பாணியில் கடத்திச் சென்றனர். அவரை பொதுமக்களின் முன்னிலையிலேயே மின்கம்பத்தில் கட்டி வைத்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பலமுறை கன்னத்தில் அறைந்து அவரை அவமானப்படுத்திய அந்த கொடூர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. அந்தஸ்து வேறுபாடு காரணமாகவே இந்த வெறிச்செயல் அரங்கேறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அட்டூழியம் செய்த பெண்ணின் உறவினர்கள் மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்து நிலவுவதால் புதுமணத் தம்பதியினருக்கு தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக யாரும் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். காதல் திருமணத்திற்காக இளைஞர் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
