மைக் அமைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி… துக்க வீட்டில் பெரும் சோகம் !
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள ராமதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜம்மாள் (70). வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. இதற்காக அதே பகுதியை சேர்ந்த டி.ஜே கலைஞர் சின்னு என்கிற நந்தகுமார் (21) ஒலிபெருக்கி அமைக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் சின்னு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்தது. ஒரே வீட்டில் இரட்டிப்பு சோகம் நிலவியது.
தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
