கல்யாண ஆசையில் ஏடிஎம் மையத்தில் இளைஞரின் வெறிச்செயல்!

 
அனு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் போன்றவைகளால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் திருவண்ணாமலையில் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஒரே நாளில் நான்கு இடங்களில் கொள்ளையர்கள் பணத்தை அள்ளிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ஏடிஎம் கொள்ளை முயற்சி அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு பகுதியில் இந்தியா ஒன் ஏடிஎம் மையத்தில் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணையில் இறங்கினர். 

அனு

சிசிடிவி காட்சிகள் ஆய்வு, தொடர் விசாரணைக்கு பிறகு சந்தேகத்தின்பேரில், அந்த ஏடிஎம் மையத்தின் அருகேயுள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனு(28 ) என்பவர் சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், அதே நேரம் அவர் சொந்த ஊருக்கு செல்ல புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

அங்குசென்று மடக்கிபிடித்த போலீசார் தனி இடத்தில்வைத்து விசாரித்தனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அனுவுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு தேவையான பணத்துடன் ஊருக்கு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். 

அனு

ஆனால், பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கதாததால், தினசரி தூங்கும் இடத்திற்கு அருகேயுள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, நள்ளிரவில் இரும்புக் கம்பிகளை கட் செய்யும் கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக கூறினார். எனினும் உள் கதவை உடைக்க முடியாததால் திருடும் முயற்சியை கைவிட்டு ஊருக்கு தப்பிச்செல்ல முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து அனுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கட்டிங் மெஷின், இரும்பு கம்பிகளை கைப்பற்றினர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web