நடுரோட்டில் சொகுசு காரில் வந்த இளைஞர்கள் பறக்கும் முத்தம் ... வைரல் வீடியோ !

 
வீடியோ
 

டெல்லி–என்.சி.ஆர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், சில இளைஞர்களின் அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்டாவின் பர்த்தலா மேம்பாலத்தில் சிவப்பு நிற எம்.ஜி ஹெக்டர் காரில் வந்த இரு இளைஞர்கள், அருகில் சென்ற காரில் இருந்த பெண்களை நோக்கி அநாகரீக சைகைகள் செய்துள்ளனர். அவர்கள் பறக்கும் முத்தங்களையும் வீசி பெண்களைத் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அந்தப் பெண்களின் காரை நீண்ட தூரம் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களின் செயல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளும் எழுந்தன.

வீடியோவை ஆதாரமாக கொண்டு நோய்டா போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கினர். சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் அமித் குமார், அபிஷேக் என்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. செக்டார் 135 பகுதியில் வசித்து வந்த இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!