குஷியில் இளைஞர்கள்.. கிராஜுட்டி விதிமுறையில் புரட்சி... இனி ஒரு வருஷம் பணியில் இருந்தாலே போதும்!

 
கிராஜுட்டி

இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பதால், கிராஜுவிட்டி (Gratuity) பெறுவதற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இது குறுகிய கால ஒப்பந்தங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இந்த மாற்றத்தின்படி, இனி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிலையான காலப் பணியாளர்கள் (Fixed Term Employees) வெறும் ஓர் ஆண்டு தொடர்ந்து பணிபுரிந்தாலே கிராஜுவிட்டி பெறத் தகுதி பெறுவார்கள். முன்பு கிராஜுவிட்டி பெற குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டிய தேவை இருந்தது.

கிராஜுட்டி

இந்தச் சலுகை, அடிக்கடி வேலை மாறுபவர்கள் மற்றும் குறுகிய காலத் திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த புதிய ஒரு வருடத் தகுதி விதி நிரந்தரப் பணியாளர்களுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூபாய் பணம் 500

கிராஜுவிட்டி என்பது, பணியாளர் தனது முதலாளிக்கு நீண்ட காலம் சேவை செய்ததற்காக வழங்கப்படும் நிதி அங்கீகாரமாகும். இந்தத் தொகையை எளிதாகக் கணக்கிட ஒரு விதி உள்ளது. ஒரு பணியாளர் பணிபுரிந்த ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாட்களுக்கான சம்பளம் கிராஜுட்டியாக வழங்கப்படும். இந்தச் சம்பளமானது, ஒரு மாதத்தில் உள்ள 26 வேலை நாட்களை அடிப்படையாக வைத்து, கடைசியாகப் பெற்ற சம்பளத்தைக் கொண்டு கணக்கிடப்படும். இந்த எளிய வழிமுறையைப் பயன்படுத்தி, ஓராண்டு பணிபுரிந்த பணியாளரும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!