பகீர்... எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்த இளம்பெண் !

 
சேலம்

ஓமலூரில் போலீஸ் எஸ்.ஐயை தாக்கி நகை, பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பூபதி இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்.
அலமேலு என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வழக்கு தொடர்பாக வந்தபோது தான் வக்கீல் என கூறி அவர் நெருக்கம் பெற்றுள்ளார்.

பின்னர் பணம் வாங்கும் பெயரில் எஸ்.ஐயை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு திடீரென உள்ளே நுழைந்த கும்பல் அவரை தாக்கியது.
3 பவுன் நகை மற்றும் ரூ.27 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அலமேலு வக்கீல் அல்ல என்பது தெரியவந்தது.
பணம் பறிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
ஏற்கனவே மூன்று பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைத்தனர்.
இந்நிலையில் அலமேலுவையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!