இளம்பெண் சாலைவிபத்தில் மூளைச்சாவு... உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு புதிய உயிர்!
புதுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான முருகேஸ்வரி, சாலைவிபத்தில் தலைக்காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தார் முன்வந்து உடல் உறுப்புத் தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவக்குழுவினர் செயல்பட்டு கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்களின் கருவிழிகள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.

எடுக்கப்பட்ட கல்லீரல் திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு ஒருவருக்கு உயிர்கொடை ஆனது. இரு கண்களின் கருவிழிகள், தோல் மற்றும் ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இன்னொரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனை நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கொடையாக அளிக்கப்பட்டது. மொத்தம் 6 பேர் புதிய உயிர் பெறும் வகையில் முருகேஸ்வரியின் உயர்ந்த மனிதநேய செயலான உறுப்பு தானம் வழிவகுத்தது.

மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்படுவதற்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உடலை உரிய மரியாதையுடன் அனுப்பி வைத்தது. உடல் உறுப்பு தானம் மூலம் பலருக்கு உயிர்தந்த முருகேஸ்வரியின் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
