ஜோதிடர் கணிப்பால் இளம்பெண் தற்கொலை... பெரும் சோகம்!
27 வயதான வித்யா ஜோதி, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்தார். இந்த நிலையில், மாற்று சமூகத்தில் திருமணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும் என ஜோதிடர் ஒருவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தவிர்க்க ஒன்பது நாள் பூஜை செய்து, இறுதி நாளில் தாலி சமர்ப்பிக்க வேண்டும் என பரிகாரம் கூறியிருந்தார்.
எட்டு நாட்கள் பூஜை நடத்தப்பட்ட நிலையில், கடைசி நாள் கோவிலுக்கு செல்லத் தயாரான பிறகு, மதியம் தனது அறைக்குச் சென்ற வித்யா ஜோதி வெளியே வரவில்லை. இரவு நேரத்தில் தாய் கவிதா பலமுறை கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ‘அல்ப ஆயுள்’ என ஜோதிடர் கூறியதால் மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்கொலை என்பது எந்தச் சூழலிலும் தீர்வு அல்ல. மனஅழுத்தம் இருந்தால் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஆலோசகர்களிடம் பேசுவது அவசியம். உதவி தேவைப்பட்டால் அருகிலுள்ள மனநலம் உதவி மையங்களை அணுகலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
