பகீர் வீடியோ... தெருநாய்கள் கடித்து குதறியதில் வாக்கிங் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
நாய் நாய்

மகாராஷ்டிர மாநிலம் புணேயில், தெரு நாய்கள் கூட்டம் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புனே -நாசிக் நெடுஞ்சாலையை ஒட்டிய சாக்கண் பகுதியில் உள்ள சேவைச் சாலையில்  நேற்று மார்ச் 16ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஷோபா வக்மாரே  என்ற பெண், அதிகாலையில் சாலையில் நடந்து சென்றபோது அங்கிருந்த தெரு நாய்கள் கூட்டம் திடீரென அவர் மீது பாய்ந்து சரமாரியாகக் கடிக்கத் தொடங்கின.

அந்தச் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ள காட்சிகளின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அறவே இல்லை. இதனால், நாய்களிடம் இருந்து தப்பிக்கப் போராடிய அந்தப் பெண்ணுக்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. நாய்களின் கொடூரத் தாக்குதலால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த ஷோபா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சாக்கண் காவல் நிலையப் போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாய்

இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகர்ப்புறங்களில் தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்பவர்களின் பாதுகாப்பு குறித்து இப்பகுதி மக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!