கணவருடன் தகராறு... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி பாலசரஸ்வதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுநராக இருந்து வந்த அந்தோணிராஜ் கடந்த 22ஆம்தேதி ஊருக்க வந்துள்ளார். இன்று பாலசரஸ்வதி, வீட்டில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் கணவர் அந்தோணிராஜ், அவரை கண்டித்து பிள்ளைகளுக்கு சாப்பாடு வழங்கிட கூறி அவர் வெளியே உள்ள கட்டிலில் உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சுவாதி, வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நாககுமாரி, இறந்தவர் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து பாலசரஸ்வதி தாயார் சுப்புராஜகனி (56) சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!