கணவருடன் சண்டை... பெற்றோரிடம் போனில் பேசிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த அம்ப்ரோஸின் மகள் பிரியங்கா (27). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் டேவிட்சனுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 5 வயது மகனும், 9 மாத குழந்தையும் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவியை சந்தேகப்பட்டு ஜெப்ரின் டேவிட்சன் அடித்து துன்புறுத்தியதாக பிரியங்கா குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவில்லை, கணவருடன் சண்டை என பெற்றோரிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், கணவர் வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
