உடலுறவுக்கு மறுத்ததால் இளம் பெண் கழுத்தை நெரித்துக் கொலை.... சாமியார் வெறிச்செயல்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கியிருந்த யாசகர்கள், காலை எழுந்தபோது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரற்ற நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், உயிரிழந்தவர் திருச்சி மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என அடையாளம் காணப்பட்டார். குடும்பத்தை பிரிந்து பொன்னமராவதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் போலீசார் உறுதி செய்தனர்.

இந்த கொலை வழக்கில், அதே யாசகர் குழுவைச் சேர்ந்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 61 வயது சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனியாக உறங்கிக் கொண்டிருந்த நூர்ஜஹானை உடலுறவுக்கு அழைத்ததும், அவர் மறுத்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கொடூர சம்பவம் பொன்னமராவதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
